ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு, கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு மைக்ரோ பிளாஸ்டிக் செல்லக்கூடும் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் பாலிமைடு-12 (PA-12) எனும் பிளாஸ்டிக்கை சுவாசித்தால், பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பலரை கவலை அடையச் செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனித ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. மொத்த சுற்றுச்சூழலின் அறிவியல் என்ற இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.