தொழில் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசின் பி எல் ஐ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, கடந்த செப்டம்பர் மாதம் வரையில் 95000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த 14 பிரிவுகளில் இந்த முதலீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் வரையில், மத்திய அரசின் பி எல் ஐ திட்டத்தில் 746 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் 24 மாநிலங்களில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், 7.8 ட்ரில்லியன் ரூபாய் அளவில் உற்பத்தி மற்றும் விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 6.4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.