ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் ஆலோசனை

December 17, 2022

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், இரு தரப்பு உறவு குறித்து பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 'ஜி - 20' நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சு நடத்தினார். இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ரஷ்ய அதிபருடன் ஜி - 20 மாநாடு குறித்து பேசிய பிரதமர், எரிசக்தி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், இரு தரப்பு உறவு குறித்து பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

'ஜி - 20' நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சு நடத்தினார். இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ரஷ்ய அதிபருடன் ஜி - 20 மாநாடு குறித்து பேசிய பிரதமர், எரிசக்தி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

மேலும், உக்ரைன் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை வாயிலாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இரு நாட்டு நட்புறவு குறித்து இரு தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu