பிரதமர் மோடி நைஜீரியா அதிபருடன் பேச்சுவார்த்தை

November 18, 2024

அபுஜாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் மோடி மற்றும் நைஜீரியா அதிபர் இரு நாடுகளின் உறவு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி நைஜீரியா சென்றுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பின், நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி பெருமை பெற்றுள்ளார். தலைநகர் அபுஜாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்தார். அதன்பின்னர், பிரதமர் மோடி […]

அபுஜாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் மோடி மற்றும் நைஜீரியா அதிபர் இரு நாடுகளின் உறவு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி நைஜீரியா சென்றுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பின், நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி பெருமை பெற்றுள்ளார். தலைநகர் அபுஜாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்தார். அதன்பின்னர், பிரதமர் மோடி நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபுவை இன்று சந்தித்தார். அபுஜாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தலைவர்களும் இரு நாடுகளின் உறவு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். நைஜீரியா பயணத்தை முடித்ததும், பிரதமர் மோடி பிரேசிலில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர், பிரேசில் பயணம் முடிந்ததும், கயானா செல்வார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu