நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு- அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

August 7, 2023

நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் 24470 கோடி செலவில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்கள், உத்தர பிரதேசம் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிரா […]

நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் 24470 கோடி செலவில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்கள்,
உத்தர பிரதேசம் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிரா 44, மேற்குவங்கத்தில் 37,மத்திய பிரதேசத்தில் 34, அஸ்ஸாமில் 3
ஒடிசாவில் 25, பஞ்சாப் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, அரியானாவில் 15, கர்நாடகாவில் 13 என்ற எண்ணிக்கையில் மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளது. மறுசீரமைப்பு பணியில் நன்கு வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து சுழற்சி பயணிகளுக்காக நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. மேலும் இது உள்ளூர் கலாச்சாரம் பாரம்பரிய மற்றும் கட்டிடக்கலை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu