ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபேவுக்கு நினைவுச் சடங்கு இன்று அரசு சார்பில் நடை பெற்றது. அதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டி௫ந்தார் அபே. அப்போது, அவர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஜூலை 12-ம் தேதி குடும்பத்தினர் சார்பில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பின்னர் அரசு சார்பில் செப்டம்பர் 27-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நினைவு சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற ஷின்சோ அபே நினைவு சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மேலும் இச்சடங்கில் சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ௯றிய மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய்க்வாத்ரா, ஷின்சோ அபேவின் நினைவு சடங்கில் பங்கேற்க டோக்கியோ செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தற்போதைய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் அபேயின் மனைவி ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேச உள்ளார் எனக் ௯றினார். மேலும் பிரதமர் மோடியின் இந்தப் பயணம், மறைந்த அபேவுக்கு மரியாதை செலுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக ௯றினார்.