பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிற முதல்வர்களும் பங்கேற்றனர். பதவியேற்புக்கு பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்களுடன் கூட்டம் நடைபெற்றது, இதில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி, மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.