மும்பையைச் சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பொருட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களுடன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்புடையவர் ஆவார். எனவே, அவர் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளார். அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சை பெறுவதற்காக கராச்சியில் உள்ள மருத்துவமனையில் தாவுத் இப்ராகிம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு ஆண்டும் தாவூத் மரணம் அடைந்து விட்டதாக வதந்திகள் பரவும். அந்த வகையில், இந்த செய்தியும் வதந்தியாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளது.