அயோத்தியில் நடைபெறுகின்ற ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதி தேவை இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானங்கள் நடக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில் உடனடியாக அனுமதி கூறி விண்ணப்பித்தபோதும் ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை, அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவினை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீசார் அனுமதி தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் உரிய கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.














