சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
சீன தலைவர் ஜி ஜிங்பிங் தற்போது அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசியா - பசிபிக் கூட்டமைப்பின் மாநாடு நடக்கும் போது இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பைடன் சீன அதிபர் ஒரு சர்வாதிகாரி என்று குறிப்பிட்டார், இதுகுறித்து அவர் கூறுகையில் நம் அரசிலிருந்து வேறுபட்ட அரசை ஒரு கம்யூனிஸ்ட் நாட்டை அவர் வழி நடத்தி வருகிறார் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.














