தமிழக அரசில் பணியாற்றும் ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்

December 27, 2022

தமிழக அரசில் பணியாற்றும் ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதித் துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அரசின் நலத் திட்டங்களுக்கு அச்சாணியாகத் திகழும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் […]

தமிழக அரசில் பணியாற்றும் ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதித் துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அரசின் நலத் திட்டங்களுக்கு அச்சாணியாகத் திகழும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து, சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்களுக்கு ரூ.1,000 சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu