சென்னை துறைமுகம் - மதுரவாயில் வரை பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் மீண்டும் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பத்து ஆண்டுகளாக பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்து வந்தது.
தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மூலம் 2021 ஆம் ஆண்டு மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் பெறப்பட்டுள்ளது. அதன்படி உயர் மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்கரை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் டெண்டர் அறிவிப்புகள் வெளியானது.
இவற்றில் பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சென்னை -மதுரவாயில் இடையே அமைக்கப்படும் இந்த பறக்கும் சாலை போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என போக்குவரத்து அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.