திருச்சியில் தபால் ஓட்டு ஒருங்கிணைப்பு மையம்

April 17, 2024

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக 4 லட்சம் ஊழியர்கள்,அதிகாரிகள் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வழக்கமாக பயிற்சி மையங்களில் பெறப்படும் தபால் ஓட்டுகள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்படும். பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தபால் மூலம் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் பெறப்படும். அத்துடன் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியிலிருந்து […]

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக 4 லட்சம் ஊழியர்கள்,அதிகாரிகள் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வழக்கமாக பயிற்சி மையங்களில் பெறப்படும் தபால் ஓட்டுகள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்படும். பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தபால் மூலம் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் பெறப்படும். அத்துடன் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியிலிருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார். இப்பணிகளில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட வேண்டியதாலும், கால விரயம் ஏற்படுவதாலும் இம்முறை புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் திருச்சி கலையரங்கம் திருமண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஒட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் வாக்காளர்கள் செலுத்திய தபால் ஓட்டுகளுடன் 39 தொகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து திருச்சி மையத்தில் ஒப்படைப்பார்கள். அவை தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அவர்கள் சார்ந்த தொகுதிகளுக்கான தபால் ஓட்டுகளை பெற்றுச் சென்று தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க படும். இதன் மூலம் அதிகாரிகளுக்கு வீன் அலைச்சல், கால விரையம், கூடுதல் செலவு ஆகியவை தவிர்க்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu