மின் வணிக ஏற்றுமதி மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் குறித்த கருத்தரங்கத்தில் தமிழகத்தில் 20 புதிய அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அஞ்சல் துறை தலைவர் கூறியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி கிடைத்தது.ஏற்றுமதியாளர்கள் தொடக்கத்தில் சர்வதேச அஞ்சல் நிலையங்களுக்கு சென்று ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு 'தர் கர் நிர்யத் கேந்திரா' என்னும் மின்னணு முறையில் ஏற்றுமதியாளர்கள் தங்கள் அலுவலகம், வீட்டில் இருந்தவாறே ஏற்றுமதி செய்து ரசீதினை பெற முடிந்தது.
சிறு , குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் சிரமம் நிலவி வருகிறது. தமிழகத்தில் தற்போது 34 ஏற்றுமதி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் 20 மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் . அமர்த்தப்பட்டுள்ளனர் மேலும் 'ஒன் ஸ்டாப் கவுண்டர்'என்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி பொருள்களை புக்கிங், பேக்கிங் செய்தல், அதிகளவு பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து பெற்றுக் கொண்டு வருதல், ஆகிய சேவைகள் வழங்கப்படும். அத்துடன் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு, புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளை எளிதாக குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய இந்த மையம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.