தமிழகத்தில் நவ.12, 13ல் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு

November 11, 2022

தமிழகத்தில் நவ.12, 13ல் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தேர்வுகள் கனமழை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இதனால் வட தமிழகம், […]

தமிழகத்தில் நவ.12, 13ல் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தேர்வுகள் கனமழை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இதனால் வட தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தட்டச்சு தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார்.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu