பிலிப்பைன்ஸில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.9 என பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள புரியாஸ் பகுதியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் நிலநடுக்கவியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது இந்த நிலநடுக்கம் 7.2 என்ற அளவு கொண்டதாக இருந்தது. பத்து கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ்-ன் பல்வேறு பகுதிகள் அதிர்வு கண்டன. இருந்தபோதிலும் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.














