காசா முனையில் குண்டு வெடிப்பு - 5 பாலஸ்தீனர்கள் பலி

September 14, 2023

காசா முனையில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் பலியாகினர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் காசா முனையில் அவ்வப்போது ராணுவ தாக்குதல் நடைபெறும். அதேபோல் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் காசாமுனையில் போராட்டம் செய்கின்றனர். 2005 ஆம் ஆண்டு காசாமுனையை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. அங்கு வேலி அமைக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய நாளை நினைவு கூறும் […]

காசா முனையில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் காசா முனையில் அவ்வப்போது ராணுவ தாக்குதல் நடைபெறும். அதேபோல் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் காசாமுனையில் போராட்டம் செய்கின்றனர். 2005 ஆம் ஆண்டு காசாமுனையை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. அங்கு வேலி அமைக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய நாளை நினைவு கூறும் வகையில் போராட்டக்காரர்கள் அங்கு திரண்டனர். அப்போது குண்டுகளை வீசி வேலியை தகர்க்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக வீசுவதற்கு முன்னதாகவே குண்டுகள் வெடித்தது. இதில் 5 பாலஸ்தீனர்கள் பலியாகினர். அதோடு போராட்டக்காரர்கள் ராணுவத்தினரை நோக்கி கைகுண்டுகளை வீசியதில் 25 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu