பராகுவே பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 15 போ் பலியாகினர்.
செக் குடியரசு நாட்டின் தலைநகரான வராகுவேல் சார்லஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் அனைவரையும் சரமாரியாக சுட்டார். இதனால் மாணவர்கள் சிதறி ஓடினர். அப்போது பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 15 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் அந்த பல்கலைக்கழகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிலருடைய நிலைமை கவலைக்கிட மாக உள்ளது. ஆகையால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்திய அந்த வாலிபரும் உயிரிழந்தார். அவர் பெயர் டேவிட் எனவும் அவர் அந்தப் பல்கலைக்கழக மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.