தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த வருட தீபாவளி வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அனைத்து காலங்களிலும் விரைவு பேருந்துகளை 30 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்ய முடியும். அந்த வகையில் நவம்பர் 10ஆம் தேதி பயணம் மேற்கொள்ளுபவர் இன்று முதல் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளலாம். நவம்பர் 11-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர பஸ் நிலையங்களில் உள்ள முன் பதிவு மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.