சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக பயணம் செய்தார்.
3 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசாம் மாநிலத்துக்கு சென்றுள்ளார். குடியரசுத் தலைவர், பாதுகாப்புத்துறை அமைச்சர், பிரதமர் என நாட்டின் முக்கிய பொறுப்புகளை வகிக்கக்கூடியவர்கள் முக்கியமான போர் விமானங்களில் பயணம் செய்வதையும், பயிற்சிகளில் கலந்துகொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்தார். முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பிறகு குடியரசு தலைவராக சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பறக்கக்கூடியவராக திரவுபதி முர்மு அறியப்பட உள்ளார். ராணுவ பலத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டவும், முப்படைகளை ஆய்வு செய்யக்கூடிய வகையிலும் குடியரசு தலைவர்கள் இத்தைகைய போர் விமானங்களில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.














