அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

July 18, 2024

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகளை காட்டுவதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் கூறப்படுவதாவது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது லாஸ் வேகசில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விரைவில் டெலாவருக்கு திரும்புவார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்படுவார். அதே சமயத்தில் அவருடைய கடமைகளை முழுமையாக செய்வார் என கூறப்பட்டுள்ளது. இது […]

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகளை காட்டுவதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் கூறப்படுவதாவது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது லாஸ் வேகசில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விரைவில் டெலாவருக்கு திரும்புவார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்படுவார். அதே சமயத்தில் அவருடைய கடமைகளை முழுமையாக செய்வார் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பைடன் அவர்கள் வலைதளத்தில் கூறுகையில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நான் தற்போது நன்றாக இருக்கிறேன். அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நான் விரைவில் குணமடைவதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளேன். அந்த நேரத்தில் இந்நாட்டு மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன் என்று பதிவிட்டுள்ளார். பைடனுக்கு வயது 81. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது இது இரண்டாவது முறையாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu