மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு – மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

August 5, 2025

அமைதி நிலைமை முழுமையாக திரும்பாத நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி கலவரத்தின் பின்னணியில் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாராளுமன்றம் ஏப்ரல் 2ம் தேதி இதற்கான ஒப்புதலை வழங்க, அதன் காலக்கெடு வரும் ஆகஸ்ட் 13க்குள் முடிவடைகிறது. இந்த நிலையில், மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது. அதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டு, அவையின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

அமைதி நிலைமை முழுமையாக திரும்பாத நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 13ம் தேதி கலவரத்தின் பின்னணியில் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாராளுமன்றம் ஏப்ரல் 2ம் தேதி இதற்கான ஒப்புதலை வழங்க, அதன் காலக்கெடு வரும் ஆகஸ்ட் 13க்குள் முடிவடைகிறது. இந்த நிலையில், மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது. அதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டு, அவையின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் அமைதி நிலைமை மேம்பட்டுள்ளதாலும், இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாலும், நிரந்தர சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu