தமிழகத்தில் முன்னுரிமை அட்டை, அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அன்ன யோஜனா குடும்ப அட்டைகளுக்கு குடும்பத்திற்கு 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் சிலர் இலவச அரிசி பெறுவதில்லை இவை முறைகேடாக வெளி மார்கெட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னுரிமை அட்டை, அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வரும் குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது குடும்பத்தில் ஒருவரின் ஆதார் எண் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி குடும்பத்தில் அனைவரின் ஆதார் எண்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலவச அரிசி முறைகேடு தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.