பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 3ம் தேதி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு பிப்ரவரி 3ஆம் தேதி செல்ல உள்ளார். மேலும் அங்கு 11 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மோடியின் வருகைக்காக மாநிலத்தில் பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். மேலும் முதல்வர் இது குறித்து கூறுகையில் அசாம் மக்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்று அழைப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு 11 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார் என தெரிவித்துள்ளார்.