அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் இளவரசர் வில்லியம் ஆகிய இருவரும் போஸ்டனில் சந்தித்து கொண்டனர்.
விருது வழங்கும் விழாவிற்காக, மனைவி கேட் உடன் இளவரசர் வில்லியம் போஸ்டனுக்கு வருகை தந்திருந்தார். ஜனநாயக கட்சிக்கு நிதி திரட்டும் பொருட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போஸ்டனுக்கு சென்றிருந்தார். எனவே, இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் அவர்கள் இருவரும் சந்தித்து உரையாடினர்.
இந்த சந்திப்பு நட்பு ரீதியிலான சந்திப்பாக இருந்தது. இளவரசராக பதவியேற்ற பின்னர், இளவரசர் வில்லியம், அமெரிக்க அதிபரை முதல் முறையாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, சுற்றுச்சூழல், நோய் பரவல், மனநல பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்துவது, போன்றவற்றை சார்ந்த விவாதங்களில் இருவரும் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜீன் பியரி இதனை தெரிவித்தார்.