'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கான சலுகைக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த வங்கிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதையடுத்து, பிம் யுபிஐ வாயிலாக செய்யப்படும் குறைந்த மதிப்பிலான பணப் பரிவர்த்தனை மற்றும் ரூபே டெபிட் கார்டுகள் வாயிலாக செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை அளித்து வருகிறது.
2022 - 23ம் நிதியாண்டுக்கான ஊக்கத் தொகை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு 2,600 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














