ரூ.15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு

March 14, 2023

இந்திய கடற்படைக்காக ரூ.15,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. வரும் 2024-ம் ஆண்டில் புதியஆலையை திறக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்திய, ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2001-ம் ஆண்டில் ஒடிசாவில் சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு நீர், நிலம், வான்பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் […]

இந்திய கடற்படைக்காக ரூ.15,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. வரும் 2024-ம் ஆண்டில் புதியஆலையை திறக்க திட்டமிடப் பட்டுள்ளது.

இந்திய, ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2001-ம் ஆண்டில் ஒடிசாவில் சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு நீர், நிலம், வான்பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு முப்படையிலும் சேர்க்கப்பட்டன.

இந்த பின்னணியில் இந்திய கடற்படைக்காக ரூ.15,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இறுதிக் கட்ட பரிசீலனை நடத்தி வருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் விரைவில் நடைபெறும். அதில் கடற்படைக்கு 200 பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu