சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு நிலவழிகாட்டி மதிப்புகள் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2021 இல் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. ஆனால் 2012ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகளை மீண்டும் கடைப்பிடிப்பதாக பதிவுத்துறை கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் நகர் புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட சர்வே எண்களுக்கு தற்போது வழிகாட்டி மதிப்பு 10 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதன்படி ஆலந்தூர், ஒக்கியம் துரைப்பாக்கம், அபிராமபுரம் ஆகிய இடங்களுக்கு வழிகாட்டி மதிப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர் போன்ற நகரங்களிலும் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த புதிய வழிகாட்டி மதிப்பு முறை நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது