என்எல்சி சுரங்க விரிவாக்க பணியை எதிர்த்து போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிகளுக்காக, சேத்தியாத்தோப்பு மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. புதன்கிழமை முதல், நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதற்கும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேற கோரியும், பாமக தலைமையில் கடலூர் மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, சாலை […]

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிகளுக்காக, சேத்தியாத்தோப்பு மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. புதன்கிழமை முதல், நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதற்கும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேற கோரியும், பாமக தலைமையில் கடலூர் மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

என்எல்சி ஐ எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள், அன்புமணி ராமதாஸ் கைது, உள்ளிட்ட சம்பவங்களால் கடலூர் மாவட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் வாகனங்கள் மற்றும் பொது பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. என்எல்சி நுழையு வாயில் போராட்ட களமாக மாறி உள்ளது. மேலும், கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, கடலூர் மாவட்டத்தில் உச்சகட்ட பதற்ற நிலை நிலவுகிறது. இந்நிலையில், நிலைமையை சமாளிக்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu