பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் நவம்பர் 26-ல் ஏவப்படும் : இஸ்ரோ 

November 23, 2022

பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் நவம்பர் 26-ல் ஏவப்படவுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட இஸ்ரோ அனுமதி அளித்துள்ளது. புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவம்பர் 26-ம் தேதி காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் ஒசோன்சாட் தவிர்த்து அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பூட்டான் சாட், […]

பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் நவம்பர் 26-ல் ஏவப்படவுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட இஸ்ரோ அனுமதி அளித்துள்ளது.

புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவம்பர் 26-ம் தேதி காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் ஒசோன்சாட் தவிர்த்து அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பூட்டான் சாட், பிக்சலின் ஆனந்த் உள்ளிட்ட 8 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன. பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி தரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu