சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிட வளாகத்தில் கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்பட்டு அது கடந்த 26 பிப்ரவரி அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதில் கருணாநிதியின் இலக்கிய,அரசியல் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தினை பொதுமக்கள் நாளை முதல் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்கு தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இது முற்றிலும் இலவசமாகும். ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதி சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 6 காட்சிகளாக நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வு செய்து அனுமதிச்சிட்டினை பெற்றுக் கொள்ளலாம்.