கல்வி அமைச்சரால் 2024-2025 பொது தேர்வு அட்டவணை வெளியீடு

October 14, 2024

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு வருகிற பிப்ரவரி 7 முதல் 14 ஆம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15 முதல் 21 ஆம் தேதி வரையிலும், மற்றும் 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22 […]

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு வருகிற பிப்ரவரி 7 முதல் 14 ஆம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15 முதல் 21 ஆம் தேதி வரையிலும், மற்றும் 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் 28-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. அதேபோல் பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் 25 ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும், மார்ச் 5 முதல் 27 ஆம் தேதி வரை 11- ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் மற்றும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 10- ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12-ம் வகுப்பு முடிவுகள் மே 9-ல், 10 மற்றும் 11-ம் வகுப்புகள் முடிவுகள் மே 19-ல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu