தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கோடை வெயில் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வை முன் கூட்டியே நடத்தி கோடை விடுமுறை விட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டு வருகின்றனர். ஏப்ரல் 28ஆம் தேதியுடன் தேர்வுகளை முடித்திருக்க […]

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கோடை வெயில் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வை முன் கூட்டியே நடத்தி கோடை விடுமுறை விட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 28ஆம் தேதியுடன் தேர்வுகளை முடித்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ள நிலையில் அந்தந்த கல்வி மாவட்ட நிர்வாகங்கள் உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுத் தேதிகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் திருவள்ளூர், திண்டுக்கல் என சில மாவட்டங்களில் ஏப்ரல் 11 தொடங்கி ஏப்ரல் 24 வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் ஏப்.21 தொடங்கி ஏப்.28ல் நடத்தி முடிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மாவட்ட தேர்வு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu