நீர் பற்றாக்குறையால் வாடும் நாடுகளின் பட்டியலை வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்'ஸ் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மாறிவரும் காலநிலை சூழ்நிலையில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை உலகளவில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது உலகெங்கிலும் பல பகுதிகளை பாதித்து வருகிறது. தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், மக்கள் தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் திறமையற்ற நீர் மேலாண்மை நடைமுறைகள் போன்ற காரணங்கள் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது. இது சமூகம் மற்றும் சுற்றுச்சூழலின் பல்வேறு அம்சங்களை பாதிக்க கூடியதாக இருக்கிறது
உலக அளவில் ஏறத்தாழ 4 பில்லியன் தனி நபர்கள், அதாவது உலக மக்கள் தொகையில் பாதி பேர் ஆண்டுதோறும் குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் 60 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
சுமார் 25 நாடுகள் நீர் அவசர நிலையை எதிர்கொண்டு வருகிறது. அதில் பஹ்ரைன், சிப்ரஸ், குவைத், லெபனான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் மிக தீவிரமான தண்ணீர் பற்றாக்குறை சந்தித்து வருகிறது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நாடுகளில் 83 சதவீத மக்களும், தெற்கு ஆசியாவில் 74 சதவீத மக்களும் இப்பிரச்சனையை எதிர்நோக்கி உள்ளனர். இவ்வாறு வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்'ஸ் எனும் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














