சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிபா் புதின் பயணம்

December 7, 2023

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் கடந்த புதன்கிழமை அரேபிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேற்கு ஆசிய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்துவதற்கும் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். முன்னதாக அவர் ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள கஸர் அலிவதன் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை அந்த […]

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் கடந்த புதன்கிழமை அரேபிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேற்கு ஆசிய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்துவதற்கும் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். முன்னதாக அவர் ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள கஸர் அலிவதன் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை அந்த நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா வரவேற்றார். பின்னர் புதின் அங்கிருந்து அதிபர் மாளிகை மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் அதிபர் ஷேக் முகமது பின்னை சந்தித்து பேசினார். இருவரும் இரு தரப்பில் வர்த்தக நல்லுறவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டனர் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு சென்றார் புதின். அங்கு அவர் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யா உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தது. இதனை தகர்த்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தான் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவு பாராட்டி வருகிறார். இதன் மூலம் சர்வதேச அளவில் தனது முக்கியத்துவத்தை தக்கவைத்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்வது செய்து வருகிறது என்பது தெரிகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu