இரண்டு நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக் கொண்டால் போரை உடனடியாக நிறுத்துவதுடன் பேச்சுவார்த்தையும் தொடங்குவதாக புதின் வாக்குறுதி அளித்தார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் புதின் பேசுகையில் உக்ரைனில் போர் நிறுத்தம் செய்ய இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்தார். உக்ரைன் ஆக்கிரமித்துள்ள நான்கு பிராந்தியங்களில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும், நேட்டோவில் சேருவதை கைவிட வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக் கொண்டால் போரை உடனடியாக நிறுத்துவதுடன் பேச்சுவார்த்தையும் தொடங்குவதாக புதின் வாக்குறுதி அளித்தார். உக்ரைன் குறித்து இத்தாலியில் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் சுவிட்சர்லாந்தில் உலகத் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இந்நிலையில் புத்தி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் சுவிட்சர்லாந்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டார்.