கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த எட்டு அதிகாரிகள் உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரம் அளிக்கப்படவில்லை. அந்த அதிகாரிகள் பலமுறை ஜாமீன் மனு அளித்தும் அவற்றை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்தது. இந்த அதிகாரிகள் இந்திய கடற்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ முறையில் முயற்சிகள் மேற்கொண்டது இந்தியா.
இந்திய அரசாங்கம் மேல்முறையீட்டு மனுவை அளித்தது. இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இனி இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.














