இந்தியாவின் 5வது பணக்காரரான ராதாகிருஷ்ணன் தமானியின் சொத்து மதிப்பு 5 வருடங்களில் 280% உயர்ந்துள்ளது

September 22, 2022

தொடக்கத்தில் பங்குச் சந்தை வர்த்தகம் செய்து, பின்னாளில் பெரும் முதலீட்டாளராக மாறிய ராதாகிருஷ்ணன் தமானி, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பங்குச் சந்தை வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்த ராகேஷ் ஜூன் ஜுவாலாவின் நெருங்கிய நண்பரும் வழிகாட்டியுமாக இவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 67 வயதாகும் இவர், இந்தியாவின் ஐந்தாவது பணக்காரராக ஆகியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 1.75 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கௌதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோரைத் […]

தொடக்கத்தில் பங்குச் சந்தை வர்த்தகம் செய்து, பின்னாளில் பெரும் முதலீட்டாளராக மாறிய ராதாகிருஷ்ணன் தமானி, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பங்குச் சந்தை வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்த ராகேஷ் ஜூன் ஜுவாலாவின் நெருங்கிய நண்பரும் வழிகாட்டியுமாக இவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 67 வயதாகும் இவர், இந்தியாவின் ஐந்தாவது பணக்காரராக ஆகியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 1.75 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கௌதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோரைத் தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் தமானி பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

பங்குச் சந்தை வர்த்தகம் மூலமாக மில்லியன் டாலர் அளவில் பணம் சம்பாதித்த ராதாகிருஷ்ணன் தமானி, கடந்த 2002 ஆம் ஆண்டு 'டி மார்ட்' கடைகளைத் திறந்து, தொழிலதிபராக மாறினார். பின்னர், பெரும் பணக்காரராக உருவெடுத்தார்.  இவருக்கு விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ், இந்தியா சிமெண்ட்ஸ்,ப்ளூ டார்ட் எக்ஸ்பிரஸ், மெட்ரோ போலீஸ் ஹெல்த் கேர், 3M இந்தியா, யுனைடெட் ப்ரூரீஸ், ட்ரெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த 5 வருடங்களில், தமானியின் சொத்து மதிப்பு 280% உயர்ந்து, 128800 கோடி ரூபாயாக உள்ளது. IIFL Wealth Hurun India Rich List தரவுகளின் படி, ஒரு நாளைக்கு 57 கோடி ரூபாயை அவர் சம்பாதித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அவரது சொத்து மதிப்பு 13% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அவரது அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட ‘டி மார்ட்’ கடைகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன. இதன் மூலம், அவர் நல்ல வருமானம் ஈட்டுகிறார். எனவே, இவரது வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில், இவரைப் போன்ற முதல் தலைமுறை தொழில் அதிபர்களின் வளர்ச்சி, அதிகரித்து வருவதாக Hurun India தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu