ராகுல் காந்தி எம்.பி. ஆக இன்று மீண்டும் பதவியேற்பு

August 7, 2023

மோடி அவமதிப்பு வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் எம்.பியாக இன்று மீண்டும் பதவி ஏற்கிறார். பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை அவமதிப்பதாக குஜராத் எம்.எல்.ஏ. ராகுல் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மார்ச் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை உருவானது . […]

மோடி அவமதிப்பு வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் எம்.பியாக இன்று மீண்டும் பதவி ஏற்கிறார்.

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை அவமதிப்பதாக குஜராத் எம்.எல்.ஏ. ராகுல் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மார்ச் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை உருவானது . இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் பொதுவெளியில் இப்படி பேசக்கூடாது. எனவே 2 ஆண்டு சிறைத்தண்டனை சரி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை எதிர்த்து மேலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதில் எனது பேச்சில் எந்த தவறும் இல்லை எனவே தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் மீண்டும் ராகுல் காந்தி எம்.பி. ஆக வாய்ப்பு உருவானது. இதனை தொடர்ந்து பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இன்று காலை ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மீண்டும் வயநாடு தொகுதியில் காலி இடம் என்பது திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இனி ராகுலுக்கு இல்லை. மேலும் நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்களில் பங்கேற்கிறார். அங்கு தொடங்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu