ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் செப்டம்பர் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது அன்றே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 17 கடைசி தேதி ஆகும். 18ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. ஆகஸ்ட் 21-ம் தேதி மனுவினை திரும்ப பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின் தேர்தல் வாக்குப்பதிவு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தேர்தல் முடிவுகளின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிகள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.