ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டி

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதியும் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாம் கட்ட தேர்தல் வருகிற 7 ஆம் தேதி 10 தொகுதிகளுக்கும், நான்காம் கட்ட […]

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதியும் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாம் கட்ட தேர்தல் வருகிற 7 ஆம் தேதி 10 தொகுதிகளுக்கும், நான்காம் கட்ட தேர்தல் 13-ஆம் தேதி 13 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்ட தேர்தல் 14ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும், ஆறாம் கட்ட தேர்தல் 25ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும், ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி 13 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் 15 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. அதன்படி ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதேபோன்று அமேதி தொகுதியில் கே.எல் சர்மா போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu