ஒடிசாவில் மீட்பு பணி நிறைவு பெற்ற நிலையில் ரெயில் பாதை சீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 17 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு தற்போது மீட்புப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்று ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.