இனிமேல் ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் பட்டியல் வெளியீடாகும். இது பயணிகள் பதற்றத்தை குறைத்து, பயண திட்டத்தில் முன்னேற்பாடுகளை செய்ய உதவும்.
இதுவரை ரெயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த நடைமுறை பயணிகளுக்குப் பிரச்சனையாக அமைந்தது. இதனை மாற்ற, ரெயில்வே வாரியம் 8 மணி நேரத்திற்கு முன்பே பட்டியல் தயாரிக்க ஆலோசனை வழங்கியது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதை ஏற்று, படிப்படியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். புதிய மாற்றம் மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுடைய டிக்கெட் நிலையை முன்னதாகவே தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியும். தொலைதூர பயணிகள் மற்றும் புறநகரிலுள்ள பயணிகளுக்கு இது மிகுந்த நன்மை தரும் என கூறப்பட்டுள்ளது.