அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. வானவில் மன்றம் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
150 இருசக்கர மோட்டார் வாகனம், நடமாடும் அறிவியல் ஆய்வகம் முதற்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நடமாடும் ஆய்வக தன்னார்வலர்கள் 20 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வழங்குவர். அறிவியல் உபகரணங்கள் வாங்க பள்ளிகளுக்கு தலா ரூ.1,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.