நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடப்பு கூட்டத்தொடரில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, இன்று பிற்பகல் 2 மணி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், கூட்டத்தொடரை நடக்க விடாமல் செய்து அமளியில் ஈடுபட்டதற்காகவும், கோஷங்கள் எழுப்பியதற்காகவும், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.