அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி அயோத்தி கோவிலில் ராமர் சிலை நிறுவப்படும்: ராமஜென்மபூமி அறக்கட்டளை 

January 7, 2023

அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தியன்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்நிலையில் ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில், ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும் என்றார். மேலும் வருகிற டிசம்பர் […]

அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தியன்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்நிலையில் ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில், ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும் என்றார்.

மேலும் வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோவிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தியன்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும். அதைத்தொடர்ந்து கோவில் திறக்கப்படும். டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu