சதுரகிரி மலையில் தீ விபத்து - காட்டு தீயை அணைக்க தீவிரம்

சதுரகிரி மலையில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 17ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலைத்தொடர் மலைப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்கள் நாசமாயின. வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு காட்டு தீயை முற்றிலும் அணைத்தனர். சதுரகிரி மலையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊஞ்சக்கல் […]

சதுரகிரி மலையில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 17ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலைத்தொடர் மலைப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்கள் நாசமாயின. வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு காட்டு தீயை முற்றிலும் அணைத்தனர். சதுரகிரி மலையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊஞ்சக்கல் மலையில் உள்ள பாப்ப நத்தம் கோவில் பகுதியில் நேற்று திடீரென காட்டுத் பரவியது.

இதனைத் தொடர்ந்து அங்கு ரேஞ்சர், செல்லமணி, பிரபாகரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இரண்டாவது நாளாக 2 குழுக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து இவர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தீ விபத்தால் சதுரகிரி கோவில் உள்ள பகுதியில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் 4 நாள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu