கள்ளசாராய விவகாரம்: சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இன்று சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் விஷ சாராயம் வாங்கிக் குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து அவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க அதிமுக,பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு […]

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இன்று சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் விஷ சாராயம் வாங்கிக் குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து அவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க அதிமுக,பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அதனைத் தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டசபை தொடங்கிய போது கள்ளச்சாராய விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 676

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu