சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’

November 17, 2022

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கடந்த வாரம் வரை தினமும் சுமார் 5 பேர் ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த நிலையில், தற்போது தினமும் சராசரியாக 50 பேர் வருகின்றனர். இவை தவிர தனியார் மருத்துவமனைகளில் 100-க்கும் அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்கின்றனர். இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ் […]

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கடந்த வாரம் வரை தினமும் சுமார் 5 பேர் ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த நிலையில், தற்போது தினமும் சராசரியாக 50 பேர் வருகின்றனர். இவை தவிர தனியார் மருத்துவமனைகளில் 100-க்கும் அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்கின்றனர்.

இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ் கூறுகையில், ‘மெட்ராஸ் ஐ’ தொற்றால் பாதிக்கப்படுவோர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘மெட்ராஸ் ஐ’ 5 நாட்களில் குணமடையக் கூடியது என்றாலும், ஒரு சிலருக்கு பார்வையிழப்பை ஏற்படுத்தலாம். அதனால் அலட்சியம் காட்டாமல் கண் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது என்று அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu