உக்ரைனுக்கு பிரான்ஸ் படை அனுப்புவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு

April 4, 2024

உக்ரைனுக்கு படையை அனுப்பினால் அது பிரான்ஸ் நாட்டுக்கு பெரிய பிரச்சினையாக முடியும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்க்கை செய்கு எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசுகையில், மேற்கத்திய நாடுகளின் படைகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்க்கை செய்கு […]

உக்ரைனுக்கு படையை அனுப்பினால் அது பிரான்ஸ் நாட்டுக்கு பெரிய பிரச்சினையாக முடியும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்க்கை செய்கு எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசுகையில், மேற்கத்திய நாடுகளின் படைகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்க்கை செய்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெகோர்னுவ் உடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளார். அப்போது பேசிய செர்க்கை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியது போல் உக்ரைனுக்கு படையை அனுப்பினால் அது பிரான்ஸ் நாட்டுக்கு பெரிய பிரச்சினையாக முடியும் என்று எச்சரித்துள்ளார். அதோடு பிரான்ஸ் நாட்டு சிறப்புத்துறைகள் உக்ரைன் விவகாரத்தில் ஈடுபடாது என நம்புகிறோம். மேற்கத்திய நாடுகளின் அனுமதியில்லாமல் உக்ரைன் எதையும் செய்வதில்லை என்று கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா உடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் மந்திரியுடன் இவ்வாறு பேசியுள்ளார். 2022 அக்டோபர் மாதத்திற்கு பிறகு இரு நாட்டின் பாதுகாப்பு மந்திரிகள் இப்போதுதான் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu